மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்காதே: கடற்றொழில் அமைச்சின் அறிவிப்புக்கு வர்ணகுலசிங்கம் எதிர்ப்பு

#SriLanka #Fisherman #Minister #Lanka4 #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்காதே: கடற்றொழில் அமைச்சின் அறிவிப்புக்கு வர்ணகுலசிங்கம் எதிர்ப்பு

மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அறிவித்ததாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் அறிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வடமாகாண மீனவ பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். 

அவர் இன்று வடமராட்சி கிழக்கில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் தற்போது வீசுகின்ற காற்று குறைந்தளவு வேகம் கொண்டது எனவும், இது பரவகாலத்திற்கு உரியது என்றும், இதைவிட பல மடங்கு வேகமாக காற்று வீசுகின்ற காலத்தில் கூட தாம் கடற்றொழிலுக்கு சென்று வந்ததாகவும், இவ்வாறு கடற்றொழிலிற்க்கு செல்ல வேண்டாம் 

என்று அறிவுறுத்தப் படுகின்றமையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் படுவதாகவும், இவ்வாறாதொரு வறுமை நிலையில்தான் கடற்றொழிலிற்கு சென்று 4 மீனவர்கள் காணாமல்போயுள்ளதாகவும், காணாமல் போன மீனவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை

என்றும், அடிக்கடி காலநிலை மாற்றத்தால் மீனவர்கள் பாதிக்கபடுவதனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4