உலகின் முதல் டிரில்லியனரான பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர் எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனை படைத்துள்ளார்.
வால் ஸ்ட்ரீட்டில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வர்த்தக பங்குகள் உயர்ந்ததை தொடர்ந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் $150 டொலரில் வர்த்தகத்தைத் தொடங்கின. நாஸ்டாக் அறிமுகத்திற்குப் பிறகு 11 சதவீதம் உயர்ந்த இந்தப் பங்குகள், நிறுவனத்தின் மதிப்பை சுமார் $1.96 டிரில்லியனாக உயர்த்தியுள்ளன.
சில நிமிடங்களுக்குள், பங்கின் விலை 20 சதவீதம் உயர்ந்து $164 ஆனது. இது, வால் ஸ்ட்ரீட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் முதல் 10 இடங்களுக்குள் ஸ்பேஸ்எக்ஸை கொண்டு வந்தது.
உலக மக்கள்தொகையில் மிகவும் ஏழ்மையான 3.8 பில்லியன் மக்களின், மொத்த செல்வத்தை விட மஸ்க் தற்போது அதிக சொத்துக்களை கொண்டுள்ளதாக ஆக்ஸ்ஃபாம் (Oxfam ) அமெரிக்கா கூறியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே