தோல்விகளை மறைக்க ஊடகங்களை ஒடுக்குகிறது அரசாங்கம்: நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டு!
அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும் பொய்களையும் மூடிமறைப்பதற்காக, ஊடகங்களையும் மாற்றுக்கருத்துடையவர்களையும் ஒடுக்கும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளைக் கையாண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் கைவிடப்பட்டுள்ளனர்
அவல நிலை: நாட்டில் கடந்த கால இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 35,000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களிலும், வாடகை வீடுகளிலும், கூடாரங்களிலும் மிகவும் அவலமான நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்களுக்கு நிலையான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் இதுவரை எவ்வித முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் மீது சுமத்தப்படும் வரி மற்றும் எரிபொருள் சுமை அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல்களின் சுமையை பொதுமக்கள் மீதே தற்போதைய நிர்வாகம் சுமத்தி வருகின்றது. இதன் காரணமாக நாளுக்கு நாள் எரிபொருள் விலை மற்றும் வரிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றக் குழு கூட்டங்களின் போது அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் அம்பலமாகின்ற போதிலும், அதற்கான தீர்வாக பொதுமக்கள் மீதே மேலும் மேலும் வரிச்சுமைகள் சுமத்தப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார்.
வீழ்ச்சியடையும் உள்நாட்டு உற்பத்தியும் பொருளாதாரமும் பொருளாதாரக் குறைபாடுகள்: உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், உள்நாட்டு விவசாயிகளையும் உற்பத்தியாளர்களையும் வலுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது.
புதிய முதலீடுகளை ஈர்க்கவோ அல்லது புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவோ முடியாத நிலையில் தற்போதைய நிர்வாகம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிடப்படாத, தன்னிச்சையான அரசியல் செயல்பாடுகளினால் நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே