எல்நினோ தாக்கத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
#SriLanka
#Flood
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
எல்நினோ தாக்கம் காரணமாக எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
தற்போது எல் நினோ நிலை பலவீனமாக இருந்தாலும், நவம்பர் மாதத்திற்குப் பின்னர் அது படிப்படியாக வலுப்பெற்று மிகவும் வலிமையான நிலையை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமன்னே தெரிவித்துள்ளார்.
மேலும், டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எல் நினோ தாக்கம் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் 60 சதவீதத்திற்கும் மேல்வுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே