தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவக்காற்று நிலைமை : பலத்த காற்று தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #weather #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவக்காற்று நிலைமை : பலத்த காற்று தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும்  தீவிரமடைந்துள்ளதென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

இந்த எச்சரிக்கையானது இன்று (15) இரவு 08.30 மணி வரை செல்லுபடியாகும். 

 இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வட மாகாணம், வடமத்திய மாகாணம், திருகோணமலை மாவட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

 தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, மேலே குறிப்பிடப்பட்ட மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

 இது தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 எனவே, மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4