நிதியமைச்சின் அறிக்கை வெளியீடு: அநுர அரசின் கீழ் உயர்ந்த நாட்டின் சொத்துக்கள்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற ஒரே ஆண்டிற்குள், நாட்டின் மொத்த பொதுச் சொத்துக்களின் மதிப்பை ஒரு இலட்சம் கோடி ரூபாவிற்கும் அதிக தொகையால் அதிகரித்துக் காட்டியுள்ளது.
இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னரான 76 ஆண்டு காலப்பகுதியில், கடந்த 2024 ஆம் ஆண்டின் இறுதிவரை உருவாக்கப்பட்ட அரசின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 835,921 கோடி ரூபாவாக (8,359.21 பில்லியன் ரூபா) காணப்பட்டது.
எனினும், அநுர குமார திசாநாயக்கவின் புதிய நிதிக்கொள்கை மற்றும் நிர்வாகத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டின் முடிவில் இந்த சொத்து மதிப்பு 977,460 கோடி ரூபாவாக (9,774.60 பில்லியன் ரூபா) உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ஒரே ஆண்டில் மாத்திரம் அரசாங்கத்தின் மொத்த சொத்துக்கள் 121,539 கோடி ரூபாவினால் (1,215.39 பில்லியன் ரூபா) கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
நிதி அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ கணக்காய்வாளர் அறிக்கையிலேயே இந்த விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் முறையான நிதி முகாமைத்துவம் மற்றும் அரச சொத்துக்களை பாதுகாத்ததன் மூலமே இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே