சுரேஷ் சலே விவகாரம் : சி.ஐ.டியிடம் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!
தடுப்பு காவலில் உள்ள சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்து வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் இன்று (16) வாக்குமூலங்கள் பெறப்படும் என்று ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவ தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் ஒரு பொது அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்த அறையில் முறையான காற்றோட்டம் இல்லாதது உட்பட பல பொதுவான அடிப்படைக் குறைபாடுகள் காணப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு அருகில் இருந்த மற்ற கைதிகளிடமிருந்தும், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே