சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா குழுவினர் இலங்கை வருகை : வெலிக்கடை சிறைச்சாலையில் கள ஆய்வு!
இலங்கைக்கு வருகை தந்துள்ள சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் பிரதிநிதிகள் இன்றும், நாளைய தினமும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு களவிஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 07 ஆண்டுகளின் பின்னர் நாட்டை வந்தடைந்துள்ள இந்த குழுவினர் வரும் 24 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார்கள்.
இந்த காலப்பகுதியில் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது மக்களின் சுதந்திரம், உரிமைகள் மறுக்கப்படும் இடங்களை மதிப்பீடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தின் தெரிவுசெய்யப்பட்ட நெறிமுறையை 2017 ஆம் ஆண்டு இலங்கை ஏற்றுக்கொண்டது.
அதன்பிரகாரம் இந்நெறிமுறையை ஏற்றுக்கொண்ட உறுப்புநாடுகளுக்கு முன்னறிவிப்புடனும், மக்களின் சுதந்திரம் முடக்கப்பட்ட அல்லது முடக்கப்படக்கூடிய இடங்களுக்கு முன்னறிவிப்பின்றியும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் விஜயம் மேற்கொள்ளமுடியும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே