தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த அரிய கல் விற்பனை - ஐவர் கைது!
#SriLanka
#Arrest
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
வரலாற்று அல்லது தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் அரிய வகை கல்லை 02 கோடி ரூபாயிற்கு விற்பனை செய்ய முயன்ற 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 29 முதல் 57 வயதுக்குட்பட்டவர்களாவர். இவர்கள் புளியங்குளம், எச்சமப்பட்டு மற்றும் திருகோணமலையைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பந்தப்பட்ட கல்லின் நம்பகத்தன்மை மற்றும் தொல்பொருள் மதிப்பை உறுதி செய்வதற்காக, அது மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே