வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 இலட்சம் ரூபாய் மோசடி; கிளிநொச்சியில் நபர் கைது!

#SriLanka #Arrest #Kilinochchi #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
11 hours ago
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 இலட்சம் ரூபாய் மோசடி; கிளிநொச்சியில் நபர் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் ஒருவர் கிளிநொச்சி பிராந்திய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து வரும் இலங்கை குடியுரிமை பெற்ற இந்த சந்தேக நபர், நபர் ஒருவரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து நேற்று (16) நண்பகல் வேளையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி வாக்குறுதிகளை வழங்கி, பாதிக்கப்பட்டவரிடமிருந்து ஐம்பது இலட்சம் ரூபாய்க்கு நெருக்கமான தொகையைப் பெற்றுக்கொண்டு இந்த நிதி மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளார் 

என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4