காதலியின் சடலத்தை காரில் கைவிட்டுச் சென்ற காதலன் - தீவிர விசாரணையில் பொலிஸார்!

#SriLanka #Police #Investigation #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
காதலியின் சடலத்தை காரில் கைவிட்டுச் சென்ற காதலன்  - தீவிர விசாரணையில் பொலிஸார்!

தெல்தெனிய பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் பொலிஸார் தீவர விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த சடலம்  பெண் உடற்பயிற்சி நிபுணருக்கு சொந்தமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  குறித்த பெண்ணின் காதலன் சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

பொலிஸாரின் தொடர் விசாரணைகளில் குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் உடற்பயிற்சி நிபுணராகப் பணிபுரிந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது. 

 அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். அ

தன்படி, அந்த ஹோட்டலின் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தபோது, மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. 

 இதேவேளை, தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு அவரது சடலம் குறித்துத் தகவல் வழங்கியவர், உயிரிழந்த பெண்ணின் காதலன் என சந்தேகிக்கப்படும் நபரே என்பதும் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது. 

 எவ்வாறாயினும், அந்த நபர் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிப்பதற்காக நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 நீதவான் விசாரணைக்குப் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது ஒரு படுகொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் ஏற்பட்ட மரணமா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4