உலக சந்தையில் விலை குறைந்தாலும் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது - பிரதமர்!

#SriLanka #PrimeMinister #Lanka4 #Market #ADDA #Harini Amarasooriya #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
உலக சந்தையில் விலை குறைந்தாலும் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது - பிரதமர்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்த போதிலும், உள்நாட்டில் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையிலுள்ள எரிபொருள் அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்டதுடன், அதன் சுமையின் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் விளக்கிய பிரதமர், "உண்மையான கணக்கீட்டின்படி பார்த்தால் தற்போதைய சந்தை நிலவரப்படி ஒரு லீற்றர் எரிபொருள் 700 ரூபாய்க்கும் அதிகமாகவே விற்பனை செய்யப்பட வேண்டும். 

எனினும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் சுமையைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் வழங்கும் விசேட நிவாரணம் காரணமாகவே அதனை 400 ரூபாய்க்கு தற்போதைக்கு வழங்க முடிகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், உலக சந்தை விலை குறைப்பின் உண்மையான பலனை உரிய நேரத்தில் மக்களுக்குக் கடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. 

அதற்கமைய, சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு வழங்குவோம் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் உறுதி அளித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4