சோமவன்ச ராஜபக்ஷவை செம்மணிக்கு அழைத்து வந்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் - சுரேஷ் பிரேமசந்திரன்!
கிரிஷாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியை செம்மணி புதைகுழி பகுதிக்கு அழைத்து வந்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அப்பகுதியில் காணப்படும் ஏனைய புதைக்குழிகள் தொடர்பிலும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுத்தியுள்ளார்.
யாழில் நேற்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கிரிஷாந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது மரண தண்டனை கைதியாக சிறையில் உள்ள சோமவன்ச ராஜபக்ஷ பல ஆண்டுகளாக செம்மணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகிறார்.
செம்மணி மாத்திரம் அன்றி அதன் அயலூர்களான, கொழும்புத்துறை, அரியாலை உள்ளிட்ட பகுதிகளிலும் புதைகுழிகள் இருப்பதாக கூறியுள்ளார்.
எனவே, புதைகுழிகள் தொடர்பான வழங்கக்கூடிய சோமவன்ச ராஜபக்ஷவை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதேவேளை, மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளின் நிலைமை இதுவரை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படாது மூடு மந்திரமாக காணப்படுகிறது.
தற்போது செம்மணி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது. செம்மணியில் மீட்கப்படும் என்பு கூடுகளை அப்படியே வைத்திருக்காது அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்
. அதனை துல்லியமாகக் கண்டறிவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் போதுமான அளவில் இல்லைஇலங்கை செய்திகள் எனவே மீட்கப்படும் என்பு கூடுகளை ஆய்வு செய்வதற்கு சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய சுயாதீன சர்வதேச விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே