யாழ். பல்கலைக்கழக விவசாயபீடத்தின் 12வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு கிளிநொச்சியில் கோலாகலமாக நடைபெற்றது!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு இன்று நடைபெற்றது. விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் நடைபெற்றது .
2026ம் ஆண்டுக்கான குறித்த மாநாட்டின் தொனிப்பொருள் "வர்த்தக விவசாயத்திற்கான புத்திசாலித்தனமான தீர்வுகள்"என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீடமானது பிரதேசத்தை மையப்படுத்தி உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு ஒன்றினை 2015ஆம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் நடாத்துகிறது.
இம்முறை பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயத்திற்கான சர்வதேச ஆராய்ச்சி மாநாடு ஆகும் 2025 ஆம் ஆண்டு ஆனி மாதம் 24 ஆம் திகதி கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு அரங்கில் வர்த்தக விவசாயத்திற்கான புத்திசாலித்தனமான தீர்வுகள் என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது .
இம்மாநாட்டின் முழுமையான அமர்வுப் பேச்சாளராக (Plenary Speaker) கனடா மனிட்டோபா பல்கலைக்கழகத்தின் மண் நுண்ணுயிரியல் பேராசிரியர் Ivan Oresnik, கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் வனவியல் பேராசிரியர் Toshiaki Owari. உரையாற்றினார். இவ்வாராய்ச்சி மாநாட்டில் இலங்கை மற்றும் சர்வதேச ஆய்வாளர்களால் பயிராக்கவியல், விலங்கு விஞ்ஞானம் மற்றும் நீருயிரினவளர்ப்பு, பயிர் பாதுகாப்பு மற்றும் உயிர்தொழில்நுட்பவியல், மண், சூழல் மற்றும் நீர் விஞ்ஞானம், உணவு விஞ்ஞானம் மற்றும் போசனையும், பொருளாதாரம் மற்றும் அறிவூட்டல் ஆகிய உபதொனிப்பொருள்களில் 60க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் முன்னிலைப்படுத்தப்பட்டு, மதிப்பாய்வு செய்யப்பட்டன.
இம்மாநாட்டிற்கு பல்வேறு பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் விவசாயத்துறைசார் நிபுணர்கள் கலந்து கொண்டனர். எதிர்காலத்தில் எவ்வாறான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உலர்வலய விவசாயத்தில் புகுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய கலந்துரையாடல்களும் இம்மாநாட்டில் இடம்பெற்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே