கிளிநொச்சி அறிவியல் நகரில் புகையிரதக் கடவையில் விபத்து – 17 வயது யுவதி உயிரிழப்பு!
#SriLanka
#Accident
#Kilinochchi
#Railway
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
4 hours ago
கிளிநொச்சி - யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி பலியாகியுள்ளார். குறித்த விபத்து முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரம் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட காரை மோதியுள்ளது.
விபத்துக்குள்ளான காரில் பயணித்த 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே