மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்ல உள்ள முதலமைச்சர் விஜய்
தமிழக முதலமைச்சர் விஜய், நாளை மறுநாள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த 17ம் திகதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து செப்.18 முதல் அக்.2ம் தேதி வரை மண்டல பூஜைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தொடக்க விழா செப். 28ம் தேதி உசிலம்பட்டியில் நடைபெறுவதாக இருந்தது.
திடீரென இடம்மாற்றப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதே தேதிதிகதியில் நடைபெறுகிறது.
இதன் காரணமாக, மதுரைக்கு வருகை தரும் தமிழக முதலமைச்சர் விஜய், மீனாட்சி அம்மன் கோவிலிலும் தரிசனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.