இலங்கையில் டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் பணப்பரிமாற்றம் செய்யத் தடை – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

#SriLanka #Central Bank #Governor #Digital #LANKA4 #Ban
Abi
1 hour ago
இலங்கையில் டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் பணப்பரிமாற்றம் செய்யத் தடை – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

இலங்கையில் டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் பணப்பரிமாற்றத்திற்குத் தடை – மத்திய வங்கி ஆளுநர் மீண்டும் வலியுறுத்தல்! இலங்கையில் தற்போதைய சட்டக் கட்டமைப்பின் கீழ், உள்நாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்கு டிஜிட்டல் சொத்துக்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை ஃபின்டெக் (Fintech) விழாவில் நேற்று (03) உரையாற்றிய அவர், இலங்கை ரூபாய்க்குப் பதிலாக டிஜிட்டல் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம் நாட்டின் நிதி இறையாண்மையைப் பாதுகாக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் மோசடி, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், சைபர் தாக்குதல் மற்றும் சந்தை விலை ஏற்ற இறக்கங்கள் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என எச்சரித்தார்.

அதேவேளை, புதிய நிதித் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க மத்திய வங்கி தயாராக இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் புதிய தொழில்நுட்பங்களைச் சோதிக்கும் வகையில் 'Fintech Regulatory Sandbox' முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!