இப்படியும் ஒரு தந்தையா? அன்பில் திளைத்த வினாடிகள்.

Nila
2 years ago
இப்படியும் ஒரு தந்தையா? அன்பில் திளைத்த வினாடிகள்.
  • தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.
  • எலும்பு முறிந்து, பிச்சையெடுத்து, 24 வருடம் 5 லட்சம் கிமீ, 20 மாகாணம். உலுக்கி போட்ட சம்பவம். பீஜிங்:
  • சினிமாவில் வரும் சம்பவம் போலவே அப்படியே சீனாவில் நடந்துள்ளது.
  • இதனால் மக்கள் ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் உறைந்து போயுள்ளனர்.
  • நீண்ட காலமாகவே சீனாவில் குழந்தை கடத்தல் விவகாரம் உள்ளது.
  • இது அந்த நாட்டில் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.
  • எந்த ஆட்சி வந்தாலும் இந்த குழந்தை கடத்தலை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
  • ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.
  • இப்படிப்பட்ட சூழலில் 1997-ம் ஆண்டு ஒரு குழந்தை கடத்தப்பட்டுவிட்டது.

குழந்தை

  • அந்த சீனர் பெயர் குவே கேங்டாங்.
  • ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்தவர்.
  • இவரது 2 வயது குழந்தையை யாரோ கடத்தி விட்டனர்.
  • சம்பவத்தன்று அந்த குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்திருக்கிறது.
  • அப்போதுதான், 2 பேர் வந்து அதை தூக்கி சென்றுவிட்டனர்.
  • இதனால் பதறி போன குவே, போலீசுக்கு ஓடினார். புகார் தந்தார்.

கடத்தல்

  • போலீசாரும் மிக தீவிரமான முயற்சிக்கு பிறகு, அந்த கடத்தல்காரர்களை கைது செய்துவிட்டனர்..
  • ஆனால் அந்த குழந்தையை காணோம்.
  • எவ்வளவோ தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
  • இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த குவே, போலீஸெல்லாம் வேலைக்காகாது என்று முடிவு செய்து செய்து, தானே களத்தில் குதித்தார்.

பைக்

  • தன்னிடம் இருந்த பணத்தை வைத்து ஒரு பைக் வாங்கி கொண்டு, மகனை தேடி ஆரம்பித்தார்..
  • ஒவ்வொரு மாகாணமாக பைக்கிலேயே சுற்றி சுற்றி தேடினர்.
  • ஒருகட்டத்தில் கையில் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது.
  • பெட்ரோல் போடவும் காசு இல்லை.
  • அதனால், எந்த ஊரில் இருக்கிறாரோ, அங்கேயே பிச்சை எடுப்பார்.
  • அந்த பிச்சை காசில் பெட்ரோல் போட்டுக் கொண்டு, மறுபடியும் மகனை தேடி இன்னொரு ஊருக்கு போவார்.


எலும்புகள்

  • இதில் பலமுறை விபத்தில் சிக்கி உள்ளார் குவே.
  • உடம்பில் எத்தனையோ எலும்புகள் முறிந்துள்ளன.
  • எத்தனையோ காயங்கள் ஆறாமல் உள்ளன.
  • எத்தனையோ முறை, பிச்சை எடுத்த பணத்தை கொள்ளையர்களிடம் இழந்துள்ளார்.
  • ஒருகட்டத்தில் வெறுத்து போய் தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.
  • ஆனால் அப்போது மகனின் போட்டோவை எடுத்து பார்த்ததும், மனம் மாறிவிடுமாம்.
  • மறுபடியும் மகனை தேட ஆரம்பித்துவிடுவார்.

கண்ணீர்

  • இப்படியே 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கிமீ பயணம் செய்தார்.
  • அதற்குள் 24 வருடம் ஆகிவிட்டது..
  • இப்போது ஒருவழியாக மகனை கண்டுபிடித்துவிட்டார்.
  • ஒருநாள் போலீசார், மகன் கிடைத்துவிட்டதாக இவருக்கு தகவல் தந்துள்ளனர்.
  • இதையடுத்து, உடனடியாக டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டு, அந்த மகன்தான் தன்னுடைய சொந்த மகன் என்பது உறுதியாகி உள்ளது.
  • இப்போது அந்த மகனுக்கு 26 வயதாகிறது.
  • ஒரு டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.
  • கல்யாணமாகி விட்டது.

நெகிழ்ச்சி

  • அப்பாவும் - மகனும் கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீரை வடித்தனர்.
  • இந்த சம்பவத்தில் மேலும் 2 ட்விஸ்ட் நடந்துள்ளது.
  • இந்த குழந்தையை அப்போது கடத்தியது ஒரு பெண்ணாம்.
  • குழந்தையை ஒரு கும்பலிடம் பணத்துக்காக விற்றுள்ளார்.
  • அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
  • இன்னொரு ட்விஸ்ட், தன் மகனை தேடி குவே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, காணாமல் போன 7 குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளாராம்.
  • அப்பாவும் - மகனும் நெகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்..!