அதிசயங்களின் தேவன்
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
அனுபவம்
இரண்டாயிரமாவது வருடத்தின் ஆரம்பத்தில் தென்மேற்கு ஐரோப்பாவை பலத்த புயற்காற்று தாக்கியது. அது வானிலை ஆராய்ச்சி நிபுணர்களே எதிர்பாராதது. அப்போது, மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளியால், ஆயிரக்கணக்கான கூரைகள் பறந்தன; மின்கம்பங்கள் அடியோடு சரிந்தன; வாகனங்கள் கவிழ்ந்தன.
இதை சற்று கற்பனை செய்து பாருங்கள்: இந்தச் சூறாவளியால் சுமார் 27 கோடி மரங்கள் முறிந்தன, அல்லது வேரோடு சாய்ந்தன. பாரிஸுக்கு பக்கத்திலுள்ள வெர்செய்ல்ஸ் பூங்காவில் மட்டுமே 10,000 மரங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டது!
லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இல்லாமற்போனது. கிட்டத்தட்ட 100 பேர் இதில் சிக்கி மடிந்தனர். கணநேரம் தாக்கிய சூறாவளியால் இவ்வளவு நாசம் ஏற்பட்டதென்றால், அது எப்பேர்ப்பட்ட வல்லமை!
சர்வ வல்லவர் இப்படிப்பட்ட இயற்கை சக்திகளை ஒரு நோக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு, முறைப்படி பயன்படுத்தி அதிசயமான செயல்களை நடப்பித்தாரானால் எப்படி இருக்கும்? இதைப் போன்ற ஒன்றை ஆபிரகாமின் காலத்தில் அவர் செய்தார்.
அற்புதம்
ஒரு காலத்தில் சோதோம் கொமோராவில் அக்கிரமம் நிலவிவந்தது; அச்சந்தர்ப்பத்தில் சர்வலோக நியாயாதிபதி எவ்வாறு நீதியை சரிக்கட்டினார் என்பதை ஆபிரகாம் தெரிந்து கொண்டார். எப்படியெனில், அந்தப் பட்டணங்களில் வாழ்ந்த மக்கள் மிகவும் மோசமானவர்கள். இதனால் அவர்களைப் பற்றிய குற்றச்சாட்டுகள் கடவுளிடம் வந்தெட்டின. அப்பட்டணங்களை அழிக்கும் முன்பு நீதிமான்கள் தப்பித்துச் செல்ல எல்லா ஏற்பாடுகளையும் அவர் செய்தார். அதற்குப்பின் அந்தப் பட்டணங்களின்மீது, 'வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் [தேவன்] வருஷிக்கப்பண்ணினார்' என்று சரித்திரப் பதிவு கூறுகிறது.
நீதிமான்களைக் காப்பாற்றி, படுமோசமான துன்மார்க்கரை அழிப்பதும் கடவுளின் அதிசய செயல்களில் ஒன்றே!
வசனம்
கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். (ஏசாயா 25:1) ஆமென்!*