தேகம் மினுமினுக்க...குப்பைமேனி!

தேகம் மினுமினுக்க...குப்பைமேனி!

குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றதாக மூலிகை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அரிமஞ்சரி, அண்டகம், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும், காடுமேட்டில் என எங்கும் காணப்படுகிறது. இதை யாரும் வளர்ப்பதில்லை, தானே வளரும் தன்மை உடையது. முக்கோண வடிவத்தில் பச்சை பசேல் என்று இருக்கும் இதன் இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். ஜாலமோகினி என்று அழைக்கப்படும் இந்த செடியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

*  குப்பைமேனி கசப்பு, காரச்சுவைகளும், வெப்பத்தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், கபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளை போக்கும்.

*   இதன் இலையை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். பருமன் மற்றும் உடல் கொழுப்பை குறைக்கும்.

*  தோல் நோய்கள் குணமாக குப்பைமேனி இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குழைத்து சருமத்தில் பூசி ஒரு மணி நேரம் ஊற வைத்த குளித்தால், சரும பிரச்னை தீரும். சரும பிரச்னை குணமாகும் வரை, ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் வீதம், மேலே குறிப்பிட்டுள்ள முறையை பின்பற்ற வேண்டும்.

*  1 பிடி குப்பைமேனி வேரை, கழுவி சுத்தம் செய்துகொண்டு, 1 லிட்டர் நீரில் இட்டு, 200 மி.லி. ஆக சுண்டக்காய்ச்சி, வடிகட்டி, குடிக்க வயிற்று பூச்சிகள் நீங்கும். சிலருக்கு இதை சாப்பிடும் போது வயிற்றுப் போக்கு ஏற்படும் என்பதால், காரம் இல்லாத உணவு மற்றும் தயிர் சாதம் சாப்பிட வேண்டும்.

*  குப்பைமேனிச் செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, லேசாக நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க

சளி, இருமல் கட்டுப்படும்.

*  குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவை சம அளவாக எடுத்துக்கொண்டு, வாணலியில் ஒன்றாக விட்டு, சுண்டக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். மூட்டுவலியுள்ள பகுதிகளில் இதனை நன்றாகத் தேய்க்க மூட்டுவலி தீரும்.

*  வண்டுக்கடி வீக்கம் குணமாக இலையை அரைத்து வீக்கத்தின் மீது பற்றுப்போட வேண்டும்.

*  தேக ஆரோக்கியத்திற்கு பெண்கள் குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் கழுவி வர, முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைவதுடன் முகம் பளபளப்பாக மாறும்.

*  10 குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பசும்பாலும் சேர்த்து அவித்து உண்டுவர, தேக அழகும், ஆரோக்கியமும் ஏற்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!