பிரபல தமிழ் சினிமா இயக்குனர் பாரதி ராஜா மருத்துவமனையில் அனுமதி
#Actor
#TamilCinema
#Hospital
#Director
#Movies
Prasu
1 hour ago
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி கால போக்கில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்த பாரதி ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது மகனும் நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் திடீரென காலமானார். மகன் மரணம் பாரதி ராஜாவை மிகவும் நிலைகுலைய செய்தது.
இந்நிலையில் 80 வயதை கடந்துள்ள பாரதிராஜா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 3 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் பாரதிராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )