மலேசியாவில் விஜயிடம் கோரிக்கை விடுத்த நடிகர் நாசர்

#Actor #TamilCinema #Malasia #Vijay #Movie
Prasu
1 hour ago
மலேசியாவில் விஜயிடம் கோரிக்கை விடுத்த நடிகர் நாசர்

நேற்று ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்று முடிந்தது. இதில் நடிகர் விஜய், டைரக்டர் எச்.வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் நாசர், படுத்த படுக்கையாக இருந்த என் மகனை எழுந்து நடக்க வைத்தவர் நீங்கள். அதற்கு நன்றி கூற இந்த மேடை மட்டுமின்றி, எந்தச் சூழலிலும் நான் அதை சொல்லிக் கொண்டே இருப்பேன்.

இந்த விழாவுக்கு நான் போறேன்னு சொன்னதும், அவன் விஜய் அண்ணாவுக்கு விஷ் பண்னேன்னு சொல்லிடுங்க என்றான். எனக்கு ஒரே ஒரு வருத்தம் மட்டும்.

நீங்கள் டயலாக் பேசலாம், நான் எடுத்த முடிவை நானே மாத்த மாட்டேன் என்று ஆனால், ஒரு முடிவு, இங்க இருக்கிற ரசிகர்களோட வேண்டுதலா உங்க முன் வைக்கிறேன். 

உங்க எல்லார் சார்பாகவும் தம்பிக்கு நான் ஒரு வேண்டுதலா வைக்கிறேன். இவர்கள் எல்லோருக்கும் நீங்கள் வேண்டும். 

தயவு செய்து நீங்கள் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும். எங்களுடைய வேண்டுகோளை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!