இன்றைய வேத வசனம் ( 04.09.2021)
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
சாது சுந்தர் சிங், தீபெத்துக்கு ஊழியம் செய்யப் போயிருந்த போது, அங்குள்ள ஒரு இரத்த சாட்சியைப் பற்றி எழுதுகிறார்.
அந்த தேவ மனிதர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபடியால், அந்த நாட்டு மக்கள் அவரைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டி, கூரான இரும்பு ஆயுதத்தை பழுப்பு நிறமாய் சூடாக்கி, அவரை குத்தினார்களாம்.
ஆனால் அந்த தேவ மனிதர், அதை பொறுமையாய் சகித்துக் கொண்டு, நீங்கள் என் சரீரத்தை அழிக்கும்படி, இப்படி வேதனைப்படுத்துகிறீர்கள்.
ஆனால், என்னுடைய உள்ளத்திலிருந்து ஒரு ஜீவநதி புறப்பட்டு, நீங்கள் குத்துகிற அந்த கூர் ஆயுதத்தின் சூட்டைத் தணித்து விடுகிறது. அந்த கூர் ஆயுதத்தால் என் ஆத்துமாவில் எந்த சேதத்தையும் விளைவிக்கவே முடியாது.
ஆனால், நீங்களோ உங்கள் பாவங்களினால் உங்களையே நீங்கள் உருவக் குத்திக் கொள்கிறீர்கள். பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; (எசே. 18:20) என்று கூறிக்கொண்டே, மிகுந்த சமாதானமாய் தன் உயிரை விட்டாராம்.
நீங்கள், கர்த்தராகிய இயேசுவோடே இணைக்கப்படும் போது, இவ்வுலகத்தில் அவர் நிமித்தம் உங்களுக்கு நேரிடக்கூடிய எவ்வித துன்பத்தையும், வேதனையையும் சகிக்கக்கூடிய பெலனையும், புது ஜீவனையும் பெற்றுக் கொள்ளுவீர்கள்.
வசனம்
அப்பொழுது மரணம் ஜெயமாக விழுங்கப்படும். கிறிஸ்து உங்களுக்கு ஜீவனாகவும், சாவு உங்களுக்கு ஆதாயமாகவும் இருக்கும். (பிலிப்பியர் 1:21)
கொரிந்தியர் 15:42,43
அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்;
ஆமென்.