இன்றைய வேத வசனம் (7.9.2021)

#Prayer #Bible
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் (7.9.2021)

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)


அற்புதம்
தன்னுடைய சரீரத்தில் பலவிதமான குறைபாடுகளுடன் பிறந்தவள் மேரி. அவள் மூக்கு மற்றும் உதடுகளில் பல குறைபாடுகள் இருந்தன.

அவள் பெற்றோர் அவளை மிகவும் நேசித்து படிக்க வைத்தனர். ஆனால் மேரியுடன் படிக்கும் சக மாணவிகள் அவள் தோற்றத்தைப் பார்த்து, கிண்டல் செய்வது வழக்கமாக இருந்தது.

இதனால் மேரி வகுப்பறையில் மிகவும் சோகத்துடன் காணப்பட்டால். அந்த வகுப்பறையில் அவளுடன் நட்புக் கொள்ள யாருமில்லை. அவளை நேசிக்கவும் யாரும் இல்லை.

இந்த நிலையில் திருமதி லியோனால் என்பவர் அவளின் வகுப்பு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இயேசு கிறிஸ்துவை அறிந்திருந்த இந்த ஆசிரியை, சில நாட்களிலேயே மேரியின் பிரச்சனையை உணர்ந்துக் கொண்டார்.

மேரிக்கு வேறு யாரும் அறியாத, மற்றொரு பிரச்சனையும் இருந்தது. அதாவது, மேரிக்கு ஒரு காது மட்டுமே கேட்கக் கூடியதாக இருந்தது. இந்த ஆசிரியை அதையும் புரிந்து கொண்டார்.

மாணவர்களிடம் கேள்வி கேட்கும் வேளையில், மேரியை வெட்கப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இந்த அன்பான ஆசிரியை, மிகவும் பரிவாய் நடந்து கொண்டார்.

ஒருநாள் மேரியை உற்சாகப் படுத்தும் விதமாய், மாணவர்களிடம் நீங்கள் ஒவ்வொருவராக வந்து, உங்கள் கையால் ஒரு காதை மூடிக் கொள்ளுங்கள். நான் மறு காதில் ஒரு இரகசியம் சொல்லுவேன், நீங்கள் திரும்ப அதை என்னிடம் கூற வேண்டும் என்று கூறினார்.

ஒவ்வொரு மாணவிகளாக வரும்போது மேரியும் வந்தாள். மேரியின் கேட்காத காதை மூட சொன்ன ஆசிரியை மற்றொரு காதில், "மேரி நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நீ என் மகளாக பிறந்து இருக்கக் கூடாதா?" என்றார்.

இதைக் கேட்ட மேரிக்கு அளவில்லாத மகிழ்ச்சி! தேவனுடைய அன்பை ஆசிரியை மூலம் உணர்ந்தாள். புன்னகை முகத்துடன் போய் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

நாளடைவில் அவளுடைய வாழ்க்கை மிகவும் மாறிற்று. அந்த வகுப்பறையிலேயே மிகச் சிறந்த மாணவியாக அவள் மாறினாள்.

அன்பான நண்பர்களே, நாம் வாழும் பகுதிகளில் வாழ்க்கையில் தோல்வியுற்று, மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு, அன்புக்காக ஏங்கும் மக்கள் இருக்கிறார்கள்.

யாராவது என்னிடம் பரிவாக பேச மாட்டார்களா? என்ற ஏக்கத்துடன், தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்து வருகிறார்கள். நம் அன்பான ஒரு வார்த்தை, நம் பரிவான ஒரு நற்செயல் அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடும்!

எனவே, நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் அன்பான, பணிவான, விசுவாச வார்த்தைகளை பேசி அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

தேவன் தாமே உங்களை அவ்விதமாக நடத்துவாராக. ஆமென்!!!

 வசனம்

நீதிமொழிகள் 25:11

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!