‘டாக்டர்’ பட ரிலீஸில் அதிரடி மாற்றம்

#Cinema
Prabha Praneetha
3 years ago
‘டாக்டர்’ பட ரிலீஸில் அதிரடி மாற்றம்

நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி உள்ள ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் தள்ளிப்போனது. 

இதனிடையே இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட படக்குழு முயன்றது. சில பிரச்சனைகளால் அந்த முடிவை கைவிட்ட படக்குழு, தற்போது டாக்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளது. வருகிற அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

 ரசிகர்களுக்காகவும், திரையரங்க உரிமையாளர்களுக்காகவும் இத்தகைய முடிவை எடுத்ததாக இப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!