VIJAY TV நிகழ்ச்சி ஒன்றை பற்றி ஒருவரின் ஆதங்கமான பதிவு

#Cinema
Shelva
3 years ago
VIJAY TV நிகழ்ச்சி ஒன்றை பற்றி ஒருவரின் ஆதங்கமான பதிவு

விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை பற்றி பல போஸ்ட்களை பார்த்து அதன் மூலம் அந்த நிகழ்ச்சியைப் பற்றி தெரிந்து கொண்ட ஒருவரின் ஆதங்கமான பதிவு இது.

பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்லும் கலைஞர்களின் பிரச்சினைகளை விவரிப்பதாக அது அமைந்தது. ஆனால் டிஆர்பி ரேட்டிங் காக அவர்கள் சற்றே ஓவர் ஆக்டிங் செய்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு, கேரவனில் மேக்கப் செய்து, ஏசி ரூமில் நடிக்கும் இவர்களுக்கு இத்தனை வருத்தம் என்றால்

1.தினமும் நம் வீட்டுக் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகளின் நிலை என்ன?

2. கண்காணாத இடத்தில், எதிரிகள் என்னேரமும் தாக்கலாம், உயிருக்கு ஒரு சதவீதம் கூட உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் வேலை பார்க்கும் (சேவை செய்யும்) நமது ராணுவ வீரர்களின் பிள்ளைகளின் நிலை என்ன?

3. காட்டு வேலைக்கும் தினக்கூலிக்கும், காலை வெறும் வயிற்றுடன் சென்று 11 மணிக்கு கிடைக்கும் டீயும், வடையும் சாப்பிட்டு விட்டு, கிடைக்கும் காசை பிள்ளைகளுக்கு கொண்டுவந்து சேருமா என்ற உத்தரவாதமில்லாத அந்த குடும்ப பிள்ளைகளின் நிலை என்ன?

4. ஊரில் எவ்வளவு நபர்களை தெரிந்து வைத்திருந்தாலும், ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு கூட பணி காரணமாக செல்ல முடியாத ஆட்களும் இருக்கிறார்கள். என்னை போன்ற போல வெளிநாட்டில் வேலை பார்க்கும். பிள்ளைகளின் நிலை என்ன?

இது போன்ற பிரச்சினைகள் நான் குறிப்பிட்ட சிலரை தவிர பலருக்கும் இருக்கிறது. ஆனால் இவர்களில் யாரும் வெளியே வந்து அதனால் வருத்தம் அடைந்ததாக தெரியவில்லை என பதிவிட்டுள்ள

முக சாயம் பூசிக்கொண்டு, காசுக்காக நகைச்சுவை என்ற பெயரில் கலாச்சாரத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் இவர்களின் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் நாம் தான் திருந்த வேண்டும்....

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!