திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை வித்யுலேகா-;படங்கள் இணைப்பு
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகை வித்யுலேகா திடீரென்று திருமணம் செய்துக் கொண்டார்.
கெளதம் மேனன் இயக்கத்தில், ஜீவா - சமந்தா நடிப்பில் வெளியான ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா.
கடந்த ஆண்டு லாக்டவுன் சமயத்தில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் வித்யுலேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அதில் கலந்து கொண்டனர். வருங்கால கணவர் சஞ்சய் உடன் வித்யூலேகா எடுத்துக் கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்றார். இந்நிலையில், திடீரென்று வித்யுலேகாவும் சஞ்சய்யும் திருமணம் செய்துகொண்டனர். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.