‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார்.
மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் விரைவில் பாடல் மற்றும் டீசர் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.