நடிகர் தனுஷுக்கு குவியும் தெலுங்கு பட வாய்ப்புகள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், அட்ரங்கி ரே போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து வரும் தனுஷ், சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார் தனுஷ்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.
இதையடுத்து ரங்தே படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்திலும் நடிக்கிறார். இது தனுஷின் 2-வது தெலுங்கு படமாகும்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் தனுஷிடம் மேலும் ஒரு தெலுங்கு இயக்குனர் கதை சொல்லி உள்ளாராம். தெலுங்கில் ஆர்எக்ஸ் 100, மகா சமுத்திரம் படங்களை இயக்கிய மகேஷ் பூபதி சொன்ன கதை தனுஷுக்கு பிடித்துவிட்டதாம்.
இதனால் அந்த கதையில் நடிப்பதற்கும் அவர் சம்மதம் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.