கார்த்தி 25 ஆவது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் யார் தெரியுமா?!
Prabha Praneetha
3 years ago
தமிழ் சினிமாவின் முன்னணித் தயாரிப்பாளரான கே இ ஞானவேல் ராஜா கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரனைத் தயாரித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணித் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் விளங்கியவர் ஞானவேல் ராஜா. சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர்களின் படங்களை அதிகமாக தயாரித்த இவர் இப்போது ஒரு சிறு இடைவெளியில் படங்கள் அதிகமாக தயாரிக்காமல் உள்ளார்.
இந்நிலையில் மீண்டும் கம்பேக் கொடுக்க ஆரம்பித்துள்ள அவர் கார்த்தியின் 25 ஆவது படத்தை தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தனது முதல் படத்தை தயாரித்த ஞானவேல் ராஜாவுக்கே 25 ஆவது படத்தை தயாரிக்கும் வாய்ப்பை வழங்க உள்ளாராம் கார்த்தி.