விபத்திற்கு பிறகு யாஷிகா ஆனந்தின் தற்போதய நிலை(புகைப்படம் உள்ளே)

#Accident #TamilCinema #Actress
Prasu
3 years ago
விபத்திற்கு பிறகு யாஷிகா ஆனந்தின் தற்போதய நிலை(புகைப்படம் உள்ளே)

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த தோழிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருந்தார் யாஷிகா.

After The Surgery

மேலும் தனக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும், அடுத்த 5 மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து புகைப்படம் வெளியிட்டு இருந்தார்.

Current Situation

தற்போது யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. காலில் கட்டுடன் படுத்து இருக்கும் யாஷிகா ஆனந்திற்கு அவரது தாய் உணவு கொடுக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்திற்கு கேப்சனாக ‘எனது வலிமை’ என்று பதிவு செய்திருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!