திகில் திரைப்படங்களை பார்த்தால் பணபரிசு வழங்கும் நிறுவனம்
நியூயார்க்: அமெரிக்காவில் பிரபலமான 13 திகில் படங்களை பார்ப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்படும் என்றுபிரபல நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
உங்களால் பேய் படங்களை தனியாக உட்கார்ந்து பார்க்க முடியுமா? எத்தனை பேய் வந்தாலும் ஒற்றை ஆளாக நின்று கடைசி நொடி வரை படம் பார்க்க முடியுமா? உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட போட்டிதான் Horror Movie Heart Rate Analyst'. ஆமாம்.. அமெரிக்காவில் பேய் படம் பார்ப்பவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் வரை பரிசு கொடுக்கிறார்கள்.
விண்ணப்பத்தின்படி.. ஒரு நபர் உலகின் தலைசிறந்த 13 திகில் படங்களை பார்க்க வேண்டும். இந்த படங்களை பார்க்கும் போது ஃபிட்பிட் (FitBit) உதவியுடன் அவர்களின் இதய ஓட்டம் கணக்கிடப்படும்.
அவர்கள் எந்த படங்களை, எந்த காட்சிகளை பார்க்கும் போது பயப்படுகிறார்கள் என்று இதன் மூலம் கணக்கிடப்படும். இந்த 13 படங்களை 10 நாட்களுக்குள் அவர்கள் பார்க்க வேண்டும். படம் பார்க்கும் எல்லோருக்கும் இந்த பரிசு தொகை வழங்கப்டும்.