சூர்யா தயாரிப்பில் உருவான ரம்யா பாண்டியன் படம்

Prabha Praneetha
3 years ago
சூர்யா தயாரிப்பில் உருவான ரம்யா பாண்டியன் படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பை தாண்டி தற்போது தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் உதாரணமாக இவர் தயாரித்த 4 படங்களுமே அமேசன் தளத்திற்கு வாரி வழங்க உள்ளார்.

தற்போது சூர்யா குறைந்த பட்ஜெட்டில் படங்களை தயாரித்து OTT தளத்திற்கு கொடுத்து அதன் மூலம் தனது தயாரிப்பு நிறுவனத்தை வலுப்படுத்தி வருகிறார்.

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சூர்யா போலவே பல நடிகர்களும் புத்திசாலியா படங்களை தயாரித்து OTT தளத்திற்கு கொடுத்து வருகின்றனர்.

சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படத்தை வருகிற 24-ஆம் திகதியன்று அமேசான் தளத்தில் நேரடியாகவெளியாகியுள்ளது.

இப்படத்தை அரிசியில் மூர்த்தி இயக்கியுள்ளார். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வளமான ரம்யா பாண்டியன் படத்தில் கதாநாயகி ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டும் மேலும் தன் குடும்பத்தில் வளரும் மாடுகளுக்கு நடக்கும் அவலங்களை எடுத்துச் சொல்லும் வகையில் படத்தின் இயக்குனர் கதைக்களத்தை அமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!