ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

Prabha Praneetha
4 years ago
ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை திறக்கப்படவுள்ளது.

தந்திரி கண்டரரு மகேஷ் மேகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில் நடையை திறந்து வைக்கவுள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதிவரை பூஜைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தடுப்பூசி  சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4