ஜெர்மன் திரைப்பட விழாவில் பங்கேற்கும் கர்ணன் திரைப்படம்!
Prabha Praneetha
3 years ago
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் ஜெர்மன் திரைப்பட விழாவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ப்ராங்பர்ட் நகரில் நடைபெறும் நியூ ஜெனரேஷன் இண்டிபெண்டண்ட் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் விழாவில் கர்ணன் திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.