தாஜ்மஹாலுக்கு அஜித் திடீர் விசிட் வைரலாகும் புகைப்படங்கள்

Prabha Praneetha
3 years ago
தாஜ்மஹாலுக்கு  அஜித்  திடீர் விசிட்  வைரலாகும் புகைப்படங்கள்

தாஜ்மஹாலில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 

கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித்.

மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித். 

தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்
இந்தப் போட்டி விரைவில் டெல்லியில் தொடங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்கு மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் நடிகர் அஜித், தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்றுள்ளார். 

அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தாஜ்மஹாலில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!