கோலிவுட் முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளம்.. இவ்வளவு வாங்கியும் வரிவிலக்கு !
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு பெயரை நிலை நாட்டினால், அடுத்த திரைப்படத்தில் இருந்து அந்த நடிகரின் சம்பளம் உயரும். அவ்வாறாக உயர்ந்து உயர்ந்து தற்போது உச்ச நட்சத்திரங்களின் சம்பளம் எவ்வளவு என்பதைப் பற்றிய தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் என்றாலே சிறு குழந்தை கூட சொல்லும் ரஜினிகாந்த், தற்போது உச்ச நட்சத்திரத்தில் முதல் இடத்தை தக்க வைத்திருக்கும் தலைவரின் வருமானம் 110 கோடியாம். தற்போது இவருக்கு சமமாக இந்த அளவிற்கான வருமானத்தை யாரும் வாங்கவில்லை.
இவரை அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் நடிகர்தான் இளையதளபதி விஜய். இவர் ஒரு திரைப்படம் நடிப்பதற்கான வருமானம் 90 கோடியாம். இந்த வருமானத்தை வைத்துக் கொண்டு சமீபத்தில் ஏற்பட்ட ஒரு விவகாரத்தில் வரிவிலக்கு கேட்டுள்ளார்.
தளபதியை தொடர்ந்து தல அஜித் ஒரு திரைப்படத்திற்கான வருமானமாக ரூபாய் 75 கோடி வாங்குகிறார். அடுத்தபடியாக உலகநாயகன் கமலஹாசன் பெரும்பாலும் தானே படத்தை இயக்கி அதில் நடித்து வருகிறார். ஆனாலும் இவர் இதர படங்களில் நடிக்கும்போது இவருக்கான வருமானமாக ரூபாய் 50 கோடி வாங்குகிறாராம்.
மேலும் நடிகர் சூர்யா 25 கோடியும் மற்றும் நடிகர் விக்ரம் ஒரு திரைப்படத்திற்கு நடிப்பதற்காக ரூபாய் 20 கோடியும் சம்பளமாக வாங்கி வருகின்றனர். நடிகர் தனுஷ் 16 கோடியும், நடிகர் சிவகார்த்திகேயன் 15 கோடியும் சம்பளமாக வாங்கி வருகின்றனர்.
நடிகர் கார்த்தி 10 கோடியும் மற்றும் நடிகர் சிம்பு சமீபத்தில் நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்திலிருந்து ரூபாய் 12 கோடியும் சம்பளமாக வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சம்பளம் வாங்கியும் இவர்களுக்கு கார் வாங்கினால் வரிவிலக்கு வேண்டுமாம்.