எஸ்.பி.பியின் கடைசி பாடல் வெளியாகும் திகதி அறிவிப்பு
Prabha Praneetha
3 years ago
அண்ணாத்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் திகதியை சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் சிங்கிள் பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பாடல் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த போஸ்டரில் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 4 ஆம் தேதி அன்று ரிலீசாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.