விஜய் திருமணத்தில் இப்படி ஒரு விசயம் இருக்குதா.... வீடியோவை பாருங்க உண்மை புரியும்
இந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் விஜய்க்கு ஒரு தனிஇடம் உண்டு. அதுவும் நல்ல கதையோ கெட்ட கதையோ வசூல் மன்னன் அவரேதான்.
அது ஒருபுறம் இருக்க விஜயின் தனி வாழ்க்கை பக்கம் சற்று திரும்பி பார்ப்போம்
ஆம் அதில் திருமணம் ஒரு முக்கிய நிகழ்வு அதிலே அது நிச்ச்ச்யம் செய்யப்பட்டதா? காதல் திருமணமா என்ற கேள்விக்கு அவரே பல வருடத்துக்கு முன்னர். ஒரு தொலக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில் கூறியதை அப்படியே தருகிறோம்.
விஜய் தனது திருமணம் பற்றிக் கூறும்போது,
``லவ் ருடே பட சூட்டிங்பண்ணிட்டு இருந்தோம். பொதுவாக பெசன் நகர், பிலிம் சிட்டி இடங்களில் சூட்டிங் நடக்கும். அப்போ சாதாரணமாக ரசிகர்கள் வந்து என்னை மீட் பண்ணுவாங்க. அப்படி ஒரு பான்னாக வந்தவர் தான் சங்கீதா.
ஒருநாள் இப்படி நான் சூட்டிங் பண்ணிக்கொண்டிருந்த போது சங்கீதா அவருடைய அன்ரியுடன் வந்து என்னை சந்தித்தாங்க. அன்ரி இங்கு இந்தியாவில் தான் இருக்காங்க. அவங்க வந்து என்னிடம் இப்படி இவங்க என்னைப் பார்க்க லண்டனிலிருந்து வந்திருப்பதாக கூறினார். போட்டோ ஆட்டோகிராப் எடுக்கவேண்டும் என்றாங்க. நானும் ஒகே எடுக்கலாமே என்றேன்.
அதுக்கப்புறம் உங்க அம்மா கூட பேசலாமா என்று கேட்டாங்க. நான் ஓம் பேசலாமே.. அவங்க நல்லா பேசுவாங்க நான் தான் ரொம்ப ரிசேவ்ட் என்றேன். பிறகு ஒரு நாள் வீட்டுக்கு வாங்க என்றேன். அதற்கப்புறமா இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு மதியபோசனத்திற்கு வந்தாங்க. வந்து ஜெனரலாக பேசிவிட்டு போய்ட்டாங்க.
அதற்கப்புறமாக காதலுக்கு மரியாதை சூட்டிங் முடிந்த பிற்பாடு அப்பா வந்து என்னிடம் தனியாக பேச வேண்டும் என்றார். அதற்கு நான் கொஞ்சம் டென்சன் ஆனாலும் பிறகு அவர் என்னிடம் சங்கீதாப்பற்றி என்ன நினைக்கிறா என்று கேட்டார். நானும் உடனே நல்ல பொண்ணு என்றேன். அவங்க பாமிலி பற்றி என்ன நினைக்கிற என்று கேட்டார். நல்ல பாமிலி நல்ல பொண்ணு நல்ல படிச்ச பொண்ணு என்று கூறினேன்.
உடனே அவர் சங்கீதாவை கல்யாண பண்ணிக்கிறயா என்றார். நானும் ரொம்ப சாக் ஆயிட்டன். என்னப்பா திடீரென்று இப்படி கேட்கிறீங்க என்று சொன்னன். எனக்கும் உன் அம்மாவிற்கும் சங்கீதாவை ரொம்ப பிடிச்சு போய்டுது. ரொம்ப நாளாவே இத பற்றி திங் பண்ணிட்டிருந்தோம். இப்போ உன் கிட்டகேட்கிறோம் என்றார். நானும் இப்ப இல்ல அப்பா அப்புறமா சொல்றன் என்றிட்டு வந்திட்டன்.
அதற்குப்பிறகு ஒரு வாரம் கழித்து மறுபடியும் அப்பா வந்து என்னிடம் அதைப்பற்றி கேட்டார். நானும் உங்க இஷ்டம் என்று கூறினேன். ஏனென்றா அம்மா அப்பா எனக்காக எவ்வளோ பண்ணியிருக்காங்க. அவங்கள சந்தோஷப்படுத்த என்னால் அதுதான் முடியும். பிற்பாடு நாங்கள் லண்டன் சென்றோம்.
லண்டன் போகும் முன் அப்பா என்னிடம் அந்தப்பொண்ணை எனக்கு நிச்சயம் பண்ணவிருக்கிறோம் என்றார். அதற்கும், நான் உங்க இஷ்டம் அப்பா என்று கூறிட்டன். என்ன வேணும் என்றாலும் பண்ணிகிங்க ஆனால் கல்யாணம் 2-3 இயர்ஸ்க்குப் பிறகு பண்ணிக்கறன் என்றன்.
எனக்கு சினிமா, கதை என்று இப்ப இருக்கேன். நீங்க வேணும் என்றால் எல்லாம் பண்ணிக்கீங்க என்றேன்.
பின் நாங்கள் லண்டன் போனோம் அவங்க பாமிலியோட பேசினோம். எங்க பாமிலி அவங்க பமிலி வீட்டோட சும்மா ரொம்ப சிம்பலா நிச்சயதார்த்தம் பண்ணிட்டோம். ம்ம். அவ்வளவுதான். இது தான் நடந்தது.