மாறி மாறி பெயர்களை பச்சைக்குத்திய சினேகன் கன்னிகா ரவி! வீடியோ
தமிழ் சினிமாவில் சுமார் 600 பாடல்கள் வரை எழுதியவர் பாடலாசிரியர் சினேகன். அதேபோல் சில படங்களிலும் நடித்திருக்கும் அவர் கமலின் மக்கள் நீதிமய்யம் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
சமீபத்தில் நடிகை கன்னிகா ரவி என்பது திருமணம் செய்து கொண்டார் சினேகன். அவரது திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.
அதையடுத்து மனைவியுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார் சினேகன். தற்போது தனது மனைவி கன்னிகாவின் பெயரை அவர் தனது கையில் பச்சைக்குத்திக் கொண்டுள்ளார் .
அந்த
ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கன்னிகா ரவி. அதேபோல் கன்னிகாவும் சினேகனின் பெயரை தனது கையில் பச்சைக்குத்திக்கொண்டுள்ளார்.
பிரபல பாடலாசிரியர் மற்றும் நடிகர் சினேகன், நடிகை கன்னிகா ரவியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்தை உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வைத்தார் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் இருவரும் திரையுலகில் பிஸியாக இருக்கும் நிலையில் இருவரும் தங்களுடைய கைகளில் மாறிமாறி பெயர்களை டாட்டூ குத்திக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.
சினேகன் தனது கையில் கன்னிகா என்றும் கன்னிகா ரவி தனது கையில் சினேகன் என்றும் டாட்டு குத்திக்கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் அவர்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சினேகன் தற்போது ’குறுக்குவழி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.