45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்தார் எஸ்பிபி: சூப்பர் ஸ்டார் நெகிழ்ச்சி

Keerthi
3 years ago
45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்தார் எஸ்பிபி: சூப்பர் ஸ்டார் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அண்ணாத்த படத்தின் முதல் பாடல் சற்று முன்னர் வெளியானது. ரஜினி பட பாடல் என்பதாலும், மறைந்த இசை வித்தகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் கடைசி பாடல் என்பதாலும், இந்த பாடல் வெளியீட்டிற்காக மக்கள் மகிழ்ச்சியும், சோகமும் கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

டி. இமாம் இசையில் வெளிவந்துள்ள பாடல், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. ரஜினி எஸ்.பி.பி காம்போவில் இதுவரை பல சூப்பர்ஹிட் பாடல்கள் வெளிவந்துள்ளன. தற்போது கடைசியாக எஸ்.பி.பி ரஜினிக்காக பாடியுள்ள இந்த பாடலும் படு மாஸாக அமைந்துள்ளது.

அண்ணாத்த படத்தின் தயாரிப்பாளர்கள் பாடலை வெளியிட்ட பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த பாடல் குறித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், எஸ்.பி.பி. பற்றி மிகவும் நெகிழ்ந்து எழுதியுள்ளார். 

இந்த பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் எஸ்.பி.பி. தனக்கு பாடும் கடைசி பாடல் என தான் நினைக்கவில்லை என்றும் ரஜினி குறிப்பிட்டுள்ளார். எஸ்.பி.பி சுமார் 45 ஆண்டுகளாக தமது குரலாக வாழ்ந்துள்ளார் என்று கூறியுள்ள ரஜினிகாந்த்,  எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். 
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!