வசூலை குவிக்கும் ‘ருத்ர தாண்டவம்’
முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக ‘ருத்ர தாண்டவம்’ படத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருவதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
‘திரெளபதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன்.ஜி இயக்கி இருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. ரிச்சர்ட் ரிஷி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடித்திருந்தார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இப்படம் கடந்த அக்டோபர் 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வெளியானது முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம், வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. அதன்படி இப்படம் முதல் 3 நாட்களில் ரூ.7.5 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக ‘ருத்ர தாண்டவம்’ படத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருவதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.