1920ல் இருந்து வெளியேறுங்கள்.... 2021க்கு வாருங்கள்... நீச்சல் உடையில் வித்யூலேகா ராமன்...
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக அறிமுகமானவர் வித்யூலேகா ராமன். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார்.
தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கி சட்டை, இனிமே இப்படித்தான், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, வேதாளம் ஆகிய படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்தார்.
கடந்த வருடம் கரோனா முதல் அலையின் போது உடல் எடையைக் குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறினார்.
இந்த நிலையில் சஞ்சய் என்பரைக் காதலித்து வந்தார். இருவருக்கும் இந்த வருடம் செப்டம்பர் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
தற்போது வித்யூலேகா மற்றும் சஞ்சய் தம்பதியினர் மாலத்தீவில் தங்களது தேனிலவைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வித்யூலேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் எப்பொழுது விவாகரத்து செய்யப்போகிறேன் என்று கேட்கிறார்கள்.
நான் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்ததற்காகவா இப்படி கேட்கிறீர்கள்? 1920ல் இருந்து வெளியேறுங்கள். 2021க்கு வாருங்கள்.
இதில் பிரச்னை என்னவென்றால், எதர்மறையான கருத்துகள் அல்ல, நாம் இந்த சமூகத்தைப் பார்க்கிறோம் என்பது தான்.
உடை என்பது விவாகர்த்துக்கு காரணமாகும் என்றால், நன்றாக உடை உடுத்துபவர்களுக்கு திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறதா?
என் கணவர் இதனை கண்டுகொள்ளாமல் இருக்க சொன்னார். ஆனால் என்னால் அப்படி கடந்துபோக முடியவில்லை. என்னை வெறுப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
என்னால் உங்களது குரூர மனநிலையை மாற்ற முடியாது. ஆனால் உங்கள் வாழ்வில் உள்ள பெண்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக களமிறங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.