முதன்முறையாக நயன்தாரா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஆர்யா

Prabha Praneetha
3 years ago
முதன்முறையாக நயன்தாரா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஆர்யா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா, அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் சினிமா துறை முடங்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது.
 
இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்‌ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன. 

இதில் நடிக்கும் நடிகர் - நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் முன்னணி நடிகர் - நடிகைகள் வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில், தற்போது நடிகர் ஆர்யா, வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் அறிமுகமாகும் வெப் தொடரை, இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மிலிந்த் ராவ், ஆர்யா

 இவர் சித்தார்த்தின் ‘அவள்’, நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

மேலும் இந்த வெப் தொடரில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருப்பது இதுவே முதன்முறை ஆகும். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!