இடி தாங்கி மோசடி: 9 பேருடன்  ஒரு கோடி ருபாய் பணம் மீட்பு

#Arrest #NuwaraEliya
Prathees
2 years ago
இடி தாங்கி மோசடி: 9 பேருடன்  ஒரு கோடி ருபாய் பணம் மீட்பு

இடி தாங்கி ஒன்றினை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்து பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகளுக்கு நேற்று (10) கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து ஏனைய சந்தேக நபர்கள்    கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், போலி வைத்தியர், போலி சட்டதரணியும் அடங்குகின்றனர்.

இடி தாங்கி ஒன்றினை கொள்வனவு செய்ய பணம் தேவைப்படுவதாகவும், அந்த இடி தாங்கியை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்றதன்  பின்னர் கிடைக்கும் பணத்தில் பாரிய தொகையை இலாபமாக தர முடியும் என கூறியே இந்த மோசடியில் அந்த ஒன்பது பேரும் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 வயதுக்கும் 60 வயதுக்கும் இடையிலான கொழும்பு, கண்டி, கெக்கிராவை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

அத்தோடு, இவர்கள் பயன்படுத்திய இரு வேன்கள் மற்றும்   காரொன்றும்  நுவரெலியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள நிலையில்,   மோசடி செய்யப்பட்ட பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் அவர்களது கையடக்க தொலைபேசிகளில் இருந்த இடி தாங்கி படம் ஒன்றை காண்பித்து, வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு 30 ஆயிரம் கோடி ரூபாவுக்கு இதனை  விற்பனை செய்யவுள்ளோம். இந்த இடி தாங்கியை எடுப்பதற்கு ஒரு தொகை பணம் தேவைப்படுவதாக கூறி ஒருவரிடமிருந்து 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த பணத்தை வழங்கும்  நபருக்கு, இடி தாங்கியை விற்ற பின்னர் 100 கோடி ரூபாவை தம்மால் இலாபமாக தர முடியும் எனவும் சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

இதன்போது போலி சட்டத்தரணியாக நடித்துள்ள ஒருவர், போலி சட்டத்தரணி முத்திரை ஒன்றினையும் பயன்படுத்தி, அதனை கொண்டு  பணம் செலுத்தும் நபர்களுடன் போலி ஒப்பந்தம் ஒன்றும் நுவரெலியாவில் விடுதி ஒன்றில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது

இவ்வாறு சந்தேக நபர்களை கைது செய்யும் போது, அவர்கள் மோசடி செய்த ஒரு கோடியே 33 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் நுவரெலியா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நுவரெலியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!