தரவுகள் மாயமான சம்பவம்: விசாரணை அறிக்கை சமர்பிப்பு

#SriLanka #Investigation
Prathees
2 years ago
தரவுகள் மாயமான சம்பவம்: விசாரணை அறிக்கை சமர்பிப்பு

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் மாயமான சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின்  தரவு களஞ்சியத்திலிருந்து சுமார் 11 லட்சம் தரவுகள் காணாமல் போயுள்ளன.

தரவுகள் காணாமல் போயுள்ளமை குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தரவு களஞ்சியத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்த எபிக் லங்கா டெக்னோலஜி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பொறியியலாளர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!