சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் உணவுகள்
சருமத்தை ஆரோக்கியமாக வைக்க அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். தினமும் ஒன்றரை லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்கும்போது சருமத்துக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது.
சருமத்தை ஆரோக்கியமாக வைக்க அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். தினமும் ஒன்றரை லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்கும்போது சருமத்துக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது.
சியா விதைகள்:
சியா விதைகள் முக அழகிற்கு பெரிதும் உதவுகின்றன. இது முகத்தை மிக மென்மையாகவும், பொலிவாகவும், எந்த வித பிரச்சினைகளும் முகத்தில் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படுகிறது.
கிரீன் டீ:
தினமும் காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ குடித்து வந்தாலே உடல் ஆரோக்கியம் மற்றும் முக அழகு இரு மடங்காக அதிகரிக்கும். மேற்சொன்ன உணவுகளை காலை வேளையில் சாப்பிட்டு வந்தாலே முக அழகு இரட்டிப்பாக கூடும்.
தோலை அழகாக்குவதில் குடைமிளகாய்க்கு முக்கிய பங்கு உண்டு. இதில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் நார்ச்சத்து உள்ளன. இதை, உணவில் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் தோலில் உள்ள சுருக்கங்கள், நிறக் குறைவு மற்றும் தோல் பிளவுகள் மறையும்.
முட்டை:
காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் பல்வேறு நலன்கள் கிடைக்கும். முட்டை நமது ஆரோக்கியத்தை சீராக வைப்பதோடு, உடல் பருமன், முக அழகு போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்.
பப்பாளி:
பப்பாளியை உணவில் சேர்த்து கொண்டால் ஏராளமான நன்மைகள் நடக்கும். குறிப்பாக முக அழகு கூடுதல், செரிமான பிரச்சினை ஆகிய நன்மைகள் உடலுக்கு நடக்கும். இதன் மீது எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால் அதிக பயன்கள் கிடைக்கும்.