‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Reha
3 years ago
 ‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

‘மெட்டி ஒலி’ தொடரில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி இன்று சென்னையில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 40. அவரது மறைவிற்கு சின்னத்திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கால்நடை மருத்துவமரை திருமணம் செய்த பிறகு உமா மகேஸ்வரியை சீரியல்களில் பார்க்க முடியவில்லை.

அவர் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் உமா மகேஸ்வரி இன்று காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு உடல்நலக் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உமா மகேஸ்வரியின் மரணம் குறித்து அறிந்த சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். உமாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.   

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!