தனுஷை தொடர்ந்து ஹாலிவுட் செல்லும் பிரகாஷ்ராஜ்!
சமீப காலத்தில் தமிழ் நடிகர்கள் பலர் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜூம் அந்த பட்டியலில் இணையவுள்ளார்.
தமிழில் அஜித் நடித்த ஆசை படம் முதலாக கில்லி, சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலம் ஆனவர் பிரகாஷ் ராஜ்.
வில்லனாக மட்டுமல்லாமல் காஞ்சிவரம், மொழி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை நிரூபித்தவர்.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் தனுஷ், நெப்போலியன் போன்ற நடிகர்கள் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ்ராஜூம் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து தெரிவித்த அவர் என்ன படம் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை.