தெலுங்கு வெப் சீரிஸில் நடிக்கும் த்ரிஷா..
நடிகை த்ரிஷா தமிழில் 2002 ஆம் ஆண்டு’மௌனம் பேசியதே’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின்பு பல படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தார்.
விஜய்யுடன் த்ரிஷா நடித்த கில்லி திரைப்படம் இன்று பார்த்தாலும் சலிக்காது என்று தான் கூற வேண்டும்.
கில்லி திரைப்படத்தின் தனலட்சுமி கதாபாத்திரம் போல் ’96 ’ஜானு கதாபாத்திரமும் மறக்கமுடியாத ஒன்று.2018 ஆம் ஆண்டு வெளியான ‘ 96’ திரைப்படம் த்ரிஷாவிற்கு பல விருதுகளை குவித்தது.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
மேலும் மலையாளத்தில் மோகன்லால் உடன் இணைந்து ‘ ராம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.தமிழில் ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சினிமாவுக்கு நிகராக வரவேற்பை பெற்று வரும் வெப் தொடர்களிலும் முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் த்ரிஷாவும் தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க முடிவு செய்துள்ளார்.இந்த வெப் சீரிஸின் பெயர் ‘ப்ரிந்தா’.
இந்த சீரிஸில் நடிக்க த்ரிஷாவிற்கு அதிக சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சீரிஸின் உரிமையை சோனி லைவ் பெற்றிருப்பது குற்றிப்பிடத்தக்கது.
இந்த வெப் தொடர் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது.